To Register your Project / ஆய்வு அறிக்கை பதிவிற்கு....

31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2023 குழந்தைகள் ஆய்வு அறிக்கை பதிவதற்கு.... https://portal.tnsf.co.in/ இந்த இணைய இணைப்பை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி

Friday, 4 August 2023

About:- National Children’s Science Congress - (NCSC), தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

 

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு [National Children’s Science Congress - (NCSC)]

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு என்பது குழந்தைகளுக்கான, அறிவியல் ஆய்வுக்கான செயல்பாடு, 1993லிருந்து கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செயல்படுத்தி வருகிறது.

 

இச்செயல்பாடு இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயல்பாட்டினை இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையும், தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழுமமும் இணைந்து நடத்துகின்றன. மாநிலங்களின்

அறிவியல் தொழில் நுட்பக்கழகங்கள் / தன்னார்வ இயக்கங்கள் இதில் பங்கேற்று ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்களில், அரசு சார்ந்த அமைப்புகளும், தமிழ்நாட்டிலும் மற்றும் சில மாநிலங்களில் தன்னார்வல அமைப்புகளும் நடத்துகின்றன. அகிலஇந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் ஒரு அங்கமான, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக, சிறப்புடன் செய்து வருகிறது.

 

இச்செயல்பாட்டின் மூலம் குழந்தைகள் அறிவியல் முறைகளை பயன்படுத்தி தாங்கள் கற்றுக் கொண்ட, தெரிந்து கொண்டவற்றை செய்து பார்த்து தீர்வுகளை, முடிவுகளை அறிக்கையாக சமர்பிப்பர். இதில் 10-17 வயதுள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். பங்கேற்பதற்கான ஒரே தகுதி வயது மட்டும்தான். பள்ளிக் குழந்தைகளும், பள்ளிசாராக் குழந்தைகளும், இரவுப் பள்ளியில் படிப்பவர்களும், படிப்பை இடைநிறுத்திய குழந்தைகளும், இல்லம் தேடி கல்வி மையம் மற்றும் துளிர் இல்ல குழந்தைகளும் இதில் பங்கேற்கலாம். மேலும் இச்செயல்பாட்டின் நோக்கமாக குழந்தைகள் மத்தியில் குழுச் செயல்பாடு, புதிய கண்டுபிடிப்பு, கள அளவில் செயல்பாடு, கள தகவல்களை கொண்டு சமூக பிரச்சனைகளை, அன்றாட வாழ்வில் உள்ள பிரச்சனைகளுக்கு அறிவியல் முறைகள் மூலம் தீர்வு கண்டுபிடித்தல் ஆகும்.

 

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கருப்பொருள் கொடுக்கப்பட்டு, குழந்தைகளால் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பல்வேறு வல்லுநர்களின் பங்களிப்புடனும். பேராசிரியர்களின் ஒத்துழைப்புடனும் இதற்கான செயல்பாட்டு கையேடு தயாராகிறது.

 

இந்தியா முழுவதிலும் உள்ள குழந்தைகள் அறிவியல் தொழில் நுட்பக் குழுமம் அறிவித்த மையப்பொருள் பற்றி சுமார் மூன்று மாத வழிகாட்டி ஆசிரியரின் துணையுடன் செய்ய வேண்டும். ஆய்வு எப்போதும், உள்ளூர் பிரச்சினைகள், தகவல்கள், செயல்பாடுகள் உள்ளதாய் இருக்க வேண்டும். ஒரு மாவட்டத்திற்குரியவர் அடுத்த மாவட்டத் தகவல்களை எடுத்து ஆய்வு செய்தல் கூடாது. தலைப்பே தன்னிலை விளக்கம் தருவதாகவும், ஆய்வு சோதனையாகவோ, கணக்கெடுப்பு முறையாகவோ, மக்களின் பிரச்சனைகளை மையப் படுத்தியோ இருக்கலாம். ஆனால், உயிர்ப் பொருள்கள், ஆபத்து விளைவிக்கும் பொருள்கள் மற்றும் மனிதனின் உணவு/பானம் போன்றவற்றை உட்கொள்ள வைத்து ஆய்வுகள் செய்தல்கூடாது.

இம் மாநாடு மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, சிந்தனையை வளர்த்து, அதற்கு அறிவியல் கண்ணோட்டத்தோடு உரிய வடிவம் கொடுக்கும் நல்ல வாய்ப்பை குழந்தைகளுக்குத் தருகிறது. ஆய்வின் கருத்தாக இளநிலை வயதினர் (10- 13)  2500 வார்த்தைகளுக்கு மிகாமலும், மேனிலை வயதினர் (14-17)  3,500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கையை தயார் செய்யவேண்டும். ஆய்வு அறிக்கை தயாரிப்புக்கான செலவு ரூ. 250 க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஆய்வின் போது தினந்தோறும் நாட்குறிப்பு ( Log Book ) எழுத வேண்டும். ஆய்வு அறிக்கையை மாணவர்கள், பள்ளி/ ஒன்றிய/ மண்டல/ மாவட்ட மாநாட்டில் சமர்ப்பிப்பார்கள். அதிலிருந்து ஆய்வு அறிக்கைகள் மாநில மாநாட்டிற்கு தெரிவு செய்யப்படும். பின்னர் அவற்றிலிருந்து தேசிய மாநாட்டிற்கு குழந்தைகளின் அறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்படும். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 27-31 தேதிகளில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு இந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத் தலைநகரில் நடைபெறும்.

 

இம்மாநாட்டில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்குவார்  எல்லா நிலைகளிலும், பங்கு பெறும் குழந்தைகளுக்கு குழந்தை விஞ்ஞானி சான்றிதழும், பரிசும் தரப்படும். குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் குழந்தைகளை, மதிப்பீட்டாளர்கள் முன்பு நேர்காணல் செய்யப்படும். இங்கு குழந்தைகள், தங்கள் ஆய்வறிக்கைக்கான பிரச்சனை மற்றும் தீர்வையும் சொல்லுவார்கள். ஒரு மாவட்டத்தில் சுமார் 200 ஆய்வறிக்கைகள் என்றால், ஒவ்வொரு ஆண்டும் இந்த தகவல்கள் தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இந்த அறிவுத் தேடல் நடைபெறுகிறது. இச்செயல் பாட்டினை தமிழ் நாட்டில் பல ஆயிரக்கணக்கான பேராசிரியர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள், பெற்றோர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிகள், கல்லூரிகள் என பல லட்சக்கணக்கானோரிடம் சென்று அடைகிறது.

 

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறும் இடத்தில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த குழந்தைகள் சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், பாலினம் கடந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்.  இங்குதான் உண்மையான தேசிய ஒற்றுமையும், ஒருமைப்பாடும் காணப்படுகிறது. தேசம் கடந்தும் தெற்காசிய நாடுகளான நேபாளம், பூடான், பர்மா, மலேசியா, சிங்கப்பூர், தைவான் மற்றும் சவுதி அரேபியா (UAE), பிரேசில் என பல நாடுகள் பங்கேற்கின்றன: உலகின் மற்ற மூன்றாம் உலக நாடுகளும் நம்மைப் போலவே தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் குழந்தைகள் பல அறிஞர்களுடன், விஞ்ஞானிகளுடன் தொடர்பு கொண்டு தனக்கு ஏற்படும் கேள்விகளுக்கும் சந்தேகத்திற்கும் விடை காண்பார்கள். இச்செயல்பாடு குழந்தைகளின் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். என்றும் இந்த நிகழ்வு அவர்களின் நெஞ்சில் பயணிக்கும் இனிமையான நினைவாக வலம் வரும்.


தேசிய மாநாடு நடைபெற்ற மாநிலங்கள்


1993 - புது டெல்லி                    

1994 - புது டெல்லி

1995 - அசாம்                            

1996 - ஆந்திரப் பிரதேசம்

1997 - மத்திய பிரதேசம்             

1998 - தமிழ்நாடு

1999 - கோவா                          

2000 - மேற்குவங்கம்

2001 - மஹாராஷ்டிரா                

2002 - கர்நாடகா

2003 - உத்திரபிரதேசம்              

2004 - அசாம்

2005 - ஓரிசா                             

2006 - சிக்கிம்

2007 - மஹாராஷ்டிரா                

2008  - நாகாலாந்து

2009 - குஜராத்                          

2010 - தமிழ்நாடு

2011 - ராஜஸ்தான்                    

2012 – உத்திரபிரதேசம்

2013 - வாரணாசி                      

2014 - கர்நாடகா

2015 - சண்டிகர்

2016 - மஹாராஷ்டிர


No comments:

Post a Comment

Format of Preparation of the Project Report

  Format of Preparation of the Project Report 👇CLICK HERE TO DOWNLOAD https://www.mediafire.com/file/phemxka0znqydyp/Format_of_Preparation_...