Format of Preparation of the Project Report
👇CLICK HERE TO DOWNLOAD
Format of Preparation of the Project Report
👇CLICK HERE TO DOWNLOAD
Click the links to download Model projects மாதிரி ஆய்வு அறிக்கைகள் 👇 TAMIL & ENGLISH
https://www.mediafire.com/file/i6d3rgegxuuntkd/NCSC_model_project_Tamil.pdf/file
https://www.mediafire.com/file/omt5rdfrpdsx81l/NCSC_model_project_English.pdf/file
NCSCஆய்வு சிறப்பாக அமைய👇 Pls click this Link to downloadable articles
NCSC - அறிவியல் மாநாட்டுக்கான
ஆய்வு பற்றிய குறிப்பு..:
செய்யவேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்.
👇 Click here to Download
https://www.mediafire.com/file/d2gyukt7ps4n5kl/Tips_For_NCSC_BY_Prof_Mohana.doc/file
ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல்
மாநாடு - 2020
பேரா.சோ.மோகனா, மேனாள் மாநில தலைவர்,
NCSC - அறிவியல் மாநாட்டுக்கான
ஆய்வு பற்றிய குறிப்பு..:
மையப் பொருள்: “ நிலைப்புரு வாழ்க்கைக்கான
அறிவியல்
/ Focal Theme Science for
Sustainable Living “
செய்யவேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்.
ü
ஆய்வு செய்யும் குழந்தைகள் 10 -17 வயதினராய் இருக்க வேண்டும்.
ü
அவர்களின் வயது அவ் வருடத்தின் டிசம்பர் 31 ம் நாள் என்ன வயதோ, அதுவே அவர்களின் ஆய்வுக் குழுவின் வயதாகும்,
ü
10 - 13+ வயதினர் இளநிலை/கீழ் நிலை Junior என்றும், 14 - 17 வயதினர், முது நிலை/ மேல் நிலை Senior
என்று சொல்லப் படுகிறது.
ü
கீழ்நிலை/இளநிலை மாணவர்கள் (10 to 13+ ), 2 ,500 வார்த்தைகளும், மேல்நிலை / முதுநிலை மாணவர்கள் (14 to 17) 3500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஆய்வறிக்கை தயாரிக்க வேண்டும்.
ü
மேலும், ஒரு குழுவில் யாரேனும் ஒருவரின் அதிக பட்ச வயது என்னவோ, அதுதான் அந்த குழுவின் வயதாகும்.
ü
குழந்தைகள்,பள்ளியில் படிக்கலாம். பள்ளியில் படிக்காமலும் இருக்கலாம்.
ஆனால் ஆய்வு செய்யலாம். வயது மட்டுமே ஆய்வுக்கான
நிர்ணயம். முறைசாரப் பள்ளி,/இரவுப் பள்ளி/சிறார் பள்ளி / இல்லம்தேடி கல்வி மையம் /துளிர் இல்லத்திலிருந்தும் கூட ஆய்வுகள் செய்யலாம்.
ü
ஆய்வு பதிவு செய்த உடனேயே, சுமார் ஒரு பக்கத்தில், ஆய்வு பற்றி எழுதி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
வழியாக மாநில மையத்திற்கு அனுப்ப வேண்டும்.
ü
குழந்தைகள், கட்டாயமாய் 2 பேர் கொண்ட குழுவாகத்தான் ஆய்வு
செய்ய வேண்டும்.
ü
தனி ஒருவராக ஆய்வு அறிக்கை
தயார் செய்ய கூடாது.
ü
ஆய்வறிக்கைக்கு உதவிட, ஒரு வழிகாட்டி ஆசிரியர்
வேண்டும்.
ü
அவர் பள்ளி ஆசிரியராகவோ, இல்லம்தேடி
கல்வி தன்னார்வலராகவோ, கல்லூரி மாணவராகவோ, வானவில் மன்றம் ஒருங்கிணைப்பாளராகவோ, துளிர் இல்ல பொறுப்பாளராகவோ,அல்லது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்
ü
பொதுவாக சோதனை முறையில்
ஆய்வு செய்தால், அதனை சரியாக முறைப்படி செய்ய வேண்டும். . ,
ü
.ஆய்வின் கருத்து புதிதான, எளிதான, செயல் முறையுடன் கூடியதாய், கூட்டு செயல்பாட்டுடன் இருக்க வேண்டும்.
ü
ஆய்வு செய்யும் விஷயங்கள், உள்ளூர் பிரச்சினைகளை
மையமாக வைத்து, தகவல்கள், கணக்கெடுப்பு ,சோதனைகள் போன்றவற்றை தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே தெரிவு செய்து, ஆய்வு செய்து கொள்ள
வேண்டும்.
ü
மாவட்ட எல்லை தாண்டுதல்
கூடாது.
ü
தலைப்பே தன்னிலை விளக்கம்
தருவதாக இருக்க வேண்டும்.
ü
புள்ளிவிபரங்கள் போதுமானதாக
இருக்க வேண்டும்.
ü
புள்ளிவிபரம்/கணக்கெடுப்பு, நேர்காணலுக்கான வினாத்தாள்
தயாரிக்கும்போது, அதில் குறைந்த பட்சம் 20 வினாக்கள் இருக்க வேண்டும்.
ü
அதே போல் ஆய்வுக்காக
நேர்காணல் செய்யப்படும் நபர்கள், குறைந்தது 50 நபராவது இருக்க வேண்டும்
ü
கட்டாயமாக , மனிதனின் மேலோ, மனிதன் உண்ணும், குடிக்கும் எந்த பொருளையும் நீங்கள் கொடுத்து அவர்கள்
மீது ஆய்வு செய்யக் கூடாது.
ü
மேலும், மருத்துவம், மருந்துகள் , வியாதி தொடர்பாகவும் நேரடியாக ஆய்வு செய்யக் கூடாது.
ü
ஆய்வறிக்கையை இணையதளத்தில்
இருந்து இறக்கி போடக்கூடாது.
ü
ஆய்வறிக்கையை கையால் எழுதலாம்; தட்டச்சும் செய்யலாம்.
ü
ஆய்வறிக்கையில் அதிகபட்சமாக
4 - நிழற்படங்கள் / அட்டை/விளம்பரப் படம் மட்டுமே இருக்க வேண்டும்.
ü
அதிகபட்சமாக உள்ள
நிழற்படங்கள் / அட்டைக்கு எவ்வித மதிப்பீடும் கிடையாது.
ü
கட்டாயமாக VCD / LCD PROJECTOR அனுமதிக்கப்பட மாட்டாது.
ü
ஆய்வறிக்கைக்கான தயாரிப்பு செலவை ரூ.250க்கு மேல் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ü
ஆய்வறிக்கையின் போது கட்டாயமாக தினசரி LOG book எழுத வேண்டும்.
( தினசரி..நாட்குறிப்பு போலத்தான் அது.)
ü
மாநாட்டின் போது, ஆய்வின் சுருக்கம், ஆங்கிலத்தில் 250 வார்த்தைகள் தட்டச்சு
செய்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க வேண்டும்.
ü
மாவட்ட மாநாட்டின் பொது
கட்டாய மாக log book சமர்ப்பிக்க வேண்டும். ,
ü
LOG book இல்லாத குழந்தைகள் மாநாட்டில் பங்கெடுக்க முடியாது.
ü
ஒவ்வொரு மாநாட்டுப் பிறகும்,குழந்தைகள், ஒரு 5 பக்கம் ,மாநாட்டிற்குப்பின் என்ன
செய்தார்கள் என்பது பற்றிய Follow -up Action பற்றிய தகவல் கட்டாயமாய் இணைக்க வேண்டும். இதனை தனியாக மதிப்பீடு செய்வார்கள்,
ü
குழந்தை விஞ்ஞானிகள் மாநாட்டிற்குப்பின் சமூகத்திடம் எவ்வாறு சென்று செயல் படப் போகிறார்கள் என்பதனையும், மாநாட்டில் அவசியம்
சொல்லவேண்டும்.
ü
குழந்தைவிஞ்ஞானிகள் ஆய்வறிக்கையை, நேர்காணலின் போது 8 (2 நிமிடம்-ஆய்வரிக்கை குறித்த சந்தேகங்கள்-நாடுவர்/பார்வையாளர்) நிமிடத்தில் சொல்லி முடிக்க
வேண்டும்.
ü
வழிகாட்டி ஆசிரியர்கள்
குழந்தை விஞ்ஞானிகளை ஆய்வறிக்கை சொல்லும்போது, நாங்கள் செய்தோம், கண்ணன் குழி தோண்டினான், நான் மண் போட்டேன், கலா விதைப் போட்டு தினம் நீர் ஊற்றினாள் என குழுவின் அனைத்து குழந்தைகளையும்
இணைத்துப் பேச பழக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு கூட்டு செயல்பாடு என்பதும், கூட்டு செயல்பாடு , நடவடிக்கைக்கு தனியான மதிப்பீடு உண்டு என்பதை, குழந்தை விஞ்ஞானிகளும், வழிகாட்டி ஆசிரியர்களும்
கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்
ü
மேலும் விபரங்களுக்கு : தங்கள் பகுதி
ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்
Format of Preparation of the Project Report 👇CLICK HERE TO DOWNLOAD https://www.mediafire.com/file/phemxka0znqydyp/Format_of_Preparation_...